×

யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ‘விவி பேட்’ கருவி

* பயிற்சி அளிக்க ஆணையம் ஏற்பாடு

நாகர்கோவில்: யாருக்கு வாக்களித்தோம் என்பதை காணும் வகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மின்னணு வாக்குபதிவு இயந்திரத்துடன் விவி பேட் கருவி பொருத்தப்பட உள்ளது. தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசோதனை அடிப்படையில் கன்னியாகுமரி உள்ளிட்ட 17 சட்டமன்ற தொகுதிகளில் வி.வி.பேட் (Voter verifiable paper audit trail (VVPAT) கருவி பொருத்தப்பட்டது. வாக்குச்சாவடிக்கு செல்லும் வாக்காளர் ஒருவர் தன்னுடைய விவரங்களை தெரிவித்த பின்னர் வாக்களிக்க அங்குள்ள ஊழியர் அனுமதி பெற்று செல்லும்போது மின்னணு வாக்குபதிவு இயந்திரம் மட்டுமே இருப்பது வழக்கம். வாக்குபதிவு கருவி மற்றும் கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றை மட்டுமே வாக்காளரால் பார்வையிட முடியும். பட்டனை அழுத்தி பீப் ஒலி கேட்டாலே வாக்குப்பதிவாகிவிட்டதாக உறுதிசெய்து வாக்குசாவடியை விட்டு வெளியே வந்துவிடலாம். அதே வேளையில் விவி பேட் கருவி பொருத்தப்பட்ட மின்னணு இயந்திரத்தில் பீப் என்ற ஒலி கேட்டதும் வி.வி.பேட் கருவியில் இருந்து அச்சடிக்கப்பட்ட துண்டு காகிதம் வரும். அதில் எந்த சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதை காண முடியும், வேட்பாளர் பெயர் உள்ளிட்ட விபரங்கள் அதில் இடம்பெற்றிருக்கும். ஏழு வினாடிகள் இதனை வாக்காளரால் காண முடியும். அதில் வாக்களித்ததற்கு மாறாக விபரங்கள் இருந்தால் அது தொடர்பாக புகார் செய்யலாம், வாக்குபதிவு நிறுத்தி வைக்கவும், பின்னர் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு மாற்று இயந்திரம் பயன்படுத்த வேண்டிய நிலை வரும்.

இது தொடர்பாக தவறான தகவலை வாக்காளர் வழங்கினால் அவர் மீது வழக்குபதிவு செய்யவும் தேர்தல் ஆணைய விதிமுறைகளில் வழிவகைகள் உள்ளன. விவி பேட் கருவிகள் வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளதால் இதன் பயன்பாடுகள் தொடர்பாக அனைத்து முக்கிய பகுதிகளிலும் சிறப்பு பயிற்சிகள் வாக்காளர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இதற்கான விவி பேட் கருவிகள் ஏற்கனவே வரவழைக்கப்பட்டு பெல் நிபுணர்களால் முதல்கட்ட சோதனை நடத்தப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்துவது தொடர்பான பயிற்சி வகுப்புகள் இந்த வார இறுதி முதல் தேர்தல் பிரிவு பணியாளர்களுக்கு தொடங்க உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் வாக்குசாவடிகள் நிலை தொடர்பாகவும், அதில் உள்ள அடிப்படை வசதிகள் தொடர்பாகவும் ஆர்டிஒ மற்றும் சப் கலெக்டர் நிலையில் அதிகாரிகள் தலைமையிலான குழு ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வீடியோ கான்பரன்ஸ் முறையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இது தொடர்பான உத்தரவுகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vivi Pad ,constituencies ,election , parliament election, VVPAT
× RELATED மே 7ம் தேதி நடந்த 3ம் கட்ட தேர்தலில் 65.68%...